வெறுங்கையில் முழம் போட முனைந்திருக்கிறோம். கருணாநிதியின் புலம்பல் அறிக்கை

election fundஆளுங்கட்சியான அதிமுகவிடம் தேர்தல் நிதி மலையளவு குவிந்துள்ளது என்றும் அவர்களோடு ஒப்பிடும்போது நம்மிடம் சேர்ந்துள்ள நிதி சிறு துளியளவுதான் என திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வந்துவிட்டால் போதும், திமுகவில் இருந்து வேட்பாளர்கள் அறிவிப்பு வருகின்றதோ இல்லையோ, தேர்தல் நிதி தாருங்கள் என்ற அறிவிப்பு உடனே அதன் தலைவர் கருணாநிதியிடம் இருந்து தவறாமல் வந்துவிடும். தேர்தலில் வெற்றி பெறுவதைவிட தேர்தல் நிதி குவிப்பதில் அந்த கட்சியின் முன்னணி தலைவர்கள் தீவிர முயற்சியில் இருப்பார்கள். இந்நிலையில் வரும் 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பே நிதி சேர்ப்பதை திமுக ஆரம்பித்துவிட்டது. இதுகுறித்து நேற்று கருணாநிதி வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளாவது:

“கடந்த ஒரு மாதத்தில் தேர்தல் நிதி, இரண்டு கோடியே 24 லட்சத்து 80 ஆயிரத்து 275 ரூபாய் சேர்ந்துள்ளது. ஆனால், ஆளுங்கட்சியினர் நம்மோடு மோதுவதற்கு, ஏற்கனவே குவித்து வைத்திருக்கின்ற, பல தரப்பட்ட வகைகளிலும் சம்பாதித்து வைத்திருக்கின்ற நிதியையும், நாம் இன்று சேர்த்து வைத்திருக்கின்ற நிதியின் அளவையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவர்களிடம் குவிந்திருப்பது மலையளவு; நம்மிடமோ சிறு துளியளவு.

இந்த சிறுதுளி அளவைக் கொண்டு தான், அந்த மலை அளவைச் சந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.கிராமங்களில், ‘வெறும் கையால் முழம் போடுவது’ என்று ஒரு பழமொழி சொல்வர். நாம் அப்படி வெறும் கையோடு தான், இந்த தேர்தலிலும் முழம் போட முனைந்திருக்கிறோம். இதில் வெற்றி, பதுக்கல் வேட்டைக்காரர்களுக்கா? அல்லது பரம ஏழைகளின் பிரதிநிதிகளான நமக்கா? என்ற கேள்விக்கு பதிலளிக்கக்கூடிய நாள், நெருங்கி கொண்டிருக்கின்றது.நிதி விஷயத்தில் என்னை நீங்களும் எதிர்பார்க்க வைத்து, என்றைக்கும் ஏமாற்றியதில்லை. அன்று அள்ளி அள்ளிக் கொடுத்த நீங்கள், இன்று நாம் வசூலிக்கும் நிதிக்கும் கிள்ளிக் கிள்ளிக் கொடுத்தாலும், தி.மு.க., பெறவுள்ள மகத்தான வெற்றிக்கு, அது வழித்துணையாய் அமையும் என, துள்ளி குதிப்பவர்களில், நானும் ஒருவன்.எனவே, என்னை கட்சி அலுவலகத்தில், வீட்டில் அல்லது வழியில் சந்திக்கும் போது, தேர்தல் நிதியை தாருங்கள்.

இவ்வாறு, கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply