கோடையில் சரும எரிச்சலை போக்கும் வழிமுறைகள்

e8d9c002-0caf-4f7f-9a5f-d6348b0a455b_S_secvpf

வெயிலில் அதிகம் சுற்றினால், சருமத்தில் சூரியக்கதிர்கள் தொடர்ந்து பட்டு, சருமத்தின் நிறம் சிவப்பு கலந்த கருமையாவதுடன் சருமம் எரிய ஆரம்பிக்கும். சூரியக்கதிர்களால் சருமம் பாதிக்கப்படாமல் இருக்க, சருமத்திற்கு போதிய பாதுகாப்புக்களை வழங்க வேண்டும்.

• வெயிலில் சுற்றி சருமம் புண்ணாகி இருந்தால், குளிக்கும் நீரில் 1 கப் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து குளித்து வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புத்துணர்ச்சி பெறும்.

• கற்றாழை ஜெல்லை தினமும் சருமத்திற்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்த பின்னர் குளித்து வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புத்துயிர் பெற்று, சூரியக்கதிர்களால் பாதிப்படைந்த சருமம் குளிர்ச்சியடையும்.

• ப்ளாக் டீயில் டானிக் ஆசிட் வளமாக நிறைந்துள்ளது. எனவே இதனைக் கொண்டு சருமத்தை தினமும் 25 நிமிடம் மசாஜ் செய்து ஊற வைத்து கழுவ, சருமத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக விலகும்.

• வெளியே வெயிலில் செல்லும் முன் சன் ஸ்க்ரீன் பயன்படுத்தி, நல்ல காட்டன் ஆடைகளை உடுத்தி, சருமம் வெளியே வெயிலில் அதிக நேரம் படாதவாறு பார்த்துக் கொள்ளவும்.

Leave a Reply