40 வது மாடியில் இருந்து கீழே விழுந்த ஐபோன் தந்த ஆச்சரியம்.

iphoneசாதாரணமாக கையில் இருந்து கீழே தவறி விழுந்தால் செல்போன்கள் உடைந்து பழுதாகிவிடும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் துபாயில் 40வது மாடியில் இருந்து கீழே விழுந்த ஒரு ஐபோன் எவ்வித சேதமும் இன்றி தப்பித்த அதிசயம் ஒன்று நடந்தது. அதுமட்டுமின்றி அந்த ஐபோன் 40வது மாடியில் இருந்து விழும்போது வீடியோவும் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காடலின் மாரின் என்ற புகழ்பெற்ற துபாய் நாட்டை சேர்ந்த புகைப்பட கலைஞர் சமீபத்தில் தனது ஐபோன் மூலம் 40வது மாடியில் இருந்து ஓடும் மேகங்களை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது கையில் இருந்த ஐபோன் தவறி கீழே விழுந்தது.

40வது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் தனது ஐபோன் சுக்குநூறாக உடைந்து போயிருக்கும் என அவர் நினைத்து கீழே இறங்கி வந்த பார்த்தபோது அவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. தனது ஐபோன் எவ்வித சேதமும் இன்றி இருந்ததோடு கீழே விழும்போது அந்த ஐபோன் வீடியோவும் எடுத்துள்ளது. தற்போது இந்த வீடியோ ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பிரபலமாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவை நீங்களும் கண்டுகளிக்க வேண்டுமா? கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

 

Leave a Reply