2016ஆம் ஆண்டு வரவுள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நேற்று பொள்ளாச்சியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு விருந் தினராகப் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியபோது, “தற்போது தமிழகத்தில் பாஜக புதிய உத்வேகத்துடன் வளர்ந்து வருகிறது. கடந்த 5 மாதங்களில் 33 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப் பட்டு 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தளுக்கு தயாராகி வருகின்றனர். மக்கள் திராவிட கட்சிகளிடம் இருந்து விடுபட ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதற்கு ஏற்ப பாஜக கூட்டணி வலுவடைந்து வருகிறது.
தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தயார் நிலையில் உள்ளது. கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு இடையே ஒருசில கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், தேர்தல் நேரத்தில் அனனத்து தலைவர்கள் ஒருமித்த கருத்துடன் தேர்தலை சந்திப்பார்கள். மேலும் வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை என்று கூறினார்.
மேலும் அவர் ஆந்திர என்கவுண்டர் பற்றி கூறும்போது, “ஆந்திராவில் தமிழக கூலித் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவத்தில், மிகப்பெரிய கடத்தல் கும்பல்களும், அவர்களுக்கு பின்னால் இருக்கக்கூடிய கடத்தல் பேர்வழிகளையும் தப்பிக்க வைக்கவே இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக சந்தேகம் எழுகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆந்திர அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்