மத்திய அரசின் அறிவியல் அன்ட் தொழிற்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பயோடெக்னாலஜி துறையில் 2015-16-ம் ஆண்டிற்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயோடெக்னாலஜி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
படிப்பு: Biotech Industrial Training Programme(BITP)-2015
தகுதி: பயோடெக்னாலஜி பிரிவில் பிஇ, பி.டெக், எம்.எஸ்சி, எம்.டெக், எம்.பி.எஸ்சி படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
கால அளவு; 6 மாதங்கள்
உதவித்தொகை: ரூ.10 ஆயிரம்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை டிடியாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bcil.nic.in என்ற இணையதள முகவரியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் தேவையான சான்றிதழ்களின் அட்டெஸ்ட் நகல்களை இணைத்து தபாலில் அனுப்ப வேண்டும். ஆன்லைனில் தேர்வு நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அதனை பிரிண்ட் எடுத்து அதனுடன் கீழ்க்கண்ட சான்றிதழ்களை சுயமாக அட்டெஸ்ட் செய்து இணைக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தை பார்க்கலாம்.