சென்னை அணிக்கு ஹாட்ரிக் வெற்றி. மும்பை அணிக்கு தொடர் தோல்வி.

cskநேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணியை தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது.

நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதல் ஓவரில் பார்த்திவ் பட்டேல், மூன்றாவது ஓவரில் ஆண்டர்சன் என இரண்டு முக்கிய விக்கெட்டுக்களை இழந்து ஆரம்பத்தில் தத்தளித்து வந்த மும்பை அணி பின்னர் ரோஹித் சர்மா மற்றும் போலார்டு ஆகியோர்களின் அதிரடி ஆட்டம் காரணமாக 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 183 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 31 பந்துகளில் 50 ரன்களும், போலார்டு 30 பந்துகளில் 64 ரன்களும் எடுத்தனர்

184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் ஆரம்பமே அசத்தலாக இருந்தது. ஸ்மித் 62 ரன்களும், மெக்கல்லம் 46 ரன்களும், சுரேஷ் ரெய்னா 43 ரன்களும் அதிரடியாக எடுத்ததால் சென்னை அணி மிக எளிதில் 16.4 ஓவர்களில் 189 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

மிக அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுக்களை வீழ்த்திய சென்னை அணியின் ஆஷிஷ் நெக்ரா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Leave a Reply