இஸ்ரேல் நாட்டு ராணுவ ரகசியங்கள் திருட்டு? பாலஸ்தீனம், எகிப்து, துருக்கி ஹெக்கர்கள் கைவரிசை

hackersஇஸ்ரேல் நாட்டின் முக்கிய ராணுவ ரகசியங்கள் இணையதளத்தின் வழியாக திருடப்பட்டுள்ளதாக திருடப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் இஸ்ரேல் உள்பட பல நாடுகளை திடுக்கிட வைத்துள்ளது.. இதை தடுக்க இஸ்ரேல் நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

உலகம் முழுவதும் இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்தன் காரணமாக ஏராளமான நன்மைகள் இருப்பதை போல பல மோசமான விளைவுகளும் இதனால் ஏற்படுகின்றது.   அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அண்டை நாடுகள் மற்றும் எதிரி நாடுகளின் ராணுவ ரகசியங்களை இணையத்தின் மூலம் திருடப்படும் போக்கு அதிகரித்து வருகிறது.

எதிரிநாட்டு ராணுவ நாட்டு ரகசியங்களை திருடுவதற்கு ஹேக்கர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டு ராணுவ இணையதளத்தில் சமீபகாலமாக ஊடுருவல் நடந்து வருவதாகவும் பாலஸ்தீனம், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளை சேர்ந்த ஹேக்கர்கள், இஸ்ரேல் நாட்டின் ராணுவ ரகசியங்களை இணையத்தின் மூலம் திருடுவதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த திருட்டில் ஹேக்கர்கள் கடந்த 4 மாதங்களாக ஈடுபட்டு வருவதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

ராணுவ ரகசியங்கள் இணையத்தின் மூலம் ஊடுருவதை தடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ராணுவ கணினி பிரிவில் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள ஊடுருவலால் பாதிக்கப்படும் நாடுகள் ஒருங்கிணைந்து இதற்கு தீர்வுகாண வேண்டும் என இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது.அதிநவீன தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட அமெரிக்காவிலும் இதுபோன்ற இணையதள ஊடுருவல் நடந்ததாக சமீபத்தில் தகவல் வெளியாகின. இதையடுத்து, அங்கு ராணுவத்துறையில் உள்ள கணினி பிரிவில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply