அரசியல் அறிவியல் என்பது உலகின் மிகப் பழமையான துறைகளில் ஒன்று. கிரேக்க ஞானிகளான, பிளாட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரின் எழுத்துக்களுடன் அது தொடங்குகிறது என்று கூறுகிறார்கள். இப்படிப்பு கோட்பாடு மற்றும் அரசியல் தொடர்பான நடைமுறை அறிவு ஆகியவை இணைந்த ஒன்றாகும்.
அரசியல் என்பது அதிகாரம் சார்ந்த சமூக உறவுகள், ஒரு அரசியல் அமைப்பிற்குள் பொது விவகாரங்களை ஒழுங்குபடுத்துதல், கொள்கை பயன்பாட்டிற்கும் உருவாக்கத்திற்குமான திட்டங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றோடு தொடர்புடையதாகும். அரசியல் அறிவியல் பாடத்தின் பல துணைப் பிரிவுகளைப் பற்றி ஆழமாக படிப்பதென்பது, அரசியல் தன்மையின் நிறை மற்றும் குறைகளை நுணுக்கமாக பகுப்பாய்வு செய்வதன் அடிப்படையில் அமைந்ததாகும். அந்த நிறை குறைகள் ஏற்கனவே மனித நாகரிகத்தில் உள்ளவை தான்.
அரசியல் அம்சங்களை நுணுக்க பகுப்பாய்வு செய்வதன் மூலமாக சிறப்பான நிர்வாகத்திற்கு பயன்படுகிறது. அரசியல் அறிவியல் என்பது ஆன்த்ரோபாலஜி, பொருளாதாரம், உளவியல், சமூகவியல், வரலாறு உள்ளிட்ட பல துறைகளுடன் தொடர்புடையதாகும்.
அரசியல் அறிவியல் படிப்பு , அரசியல் கோட்பாடு, பொதுக்கொள்கை, தேசிய அரசியல், ஒப்பீட்டு அரசியல், சர்வதேச உறவுகள் ஆகியவற்றின் சிறப்பு அம்சங்களை வழங்குகிறது. அரசியல் அறிவியல் படிப்பு, ஒரு மாணவரின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு உதவி புரிகிறது. ஒரு மாணவரின் பேச்சுத்திறன் மட்டுமின்றி, எழுத்துத் திறனையும் வளர்ப்பதோடு அவரின் பகுப்பாய்வு திறனையும் மேம்படுத்துகிறது.
அரசியல் அறிவியல் பின்புலம் கொண்ட மாணவர்கள் பெடரல், ஸ்டேட், உள்ளூர் அரசாங்கங்கள், செயல்திட்ட மேலாண்மை மற்றும் ஓட்டுப்பதிவு மற்றும் தேர்தல் அரசியல் ஆகிய துறைகளில் பணி வாய்ப்புகளை பெறுகிறார்கள்.
இத்துறை படிப்பை மேற்கொள்ளும் பல மாணவர்கள் ஏதேனும் ஒரு பிரிவைத் தேர்வு செய்து, அதில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும் ஆர்வம் செலுத்துகிறார்கள். சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற விரும்பும் மாணவர்கள் பலரால், அரசியல் அறிவியல் படிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இப்படிப்பை முடித்த பட்டதாரிகள், சர்வதேச அமைப்புகளிலும் பணி வாய்ப்புகளை பெற முடியும்.
இந்தியாவில் இப்படிப்பை வழங்கும் சில கல்வி நிறுவனங்கள்:
பாபாசாகிப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் – லக்னோ,
ஜவஹர்லால் நேரு பல்கலை – டெல்லி,
பாண்டிச்சேரி பல்கலை – புதுச்சேரி,
காமராஜர் பல்கலை – மதுரை,
பெரியார் பல்கலைக்கழகம் – சேலம்,
அண்ணாமலை பல்கலை – சிதம்பரம்,
பஞ்சாப் பல்கலை – லூதியானா,
பனஸ்தாலி பல்கலை – ஜெய்ப்பூர்,
பெங்களூர் பல்கலை – பெங்களூர்,
சவுத்ரி சரண்சிங் பல்கலை – மீரட் ,
குல்பர்கா பல்கலை – கர்நாடகா,
இமாச்சல பிரதேச பல்கலை – சிம்லா,
இக்னோ – டெல்லி,
ஜாதவ்பூர் பல்கலை – ஜாதவ்பூர், மேற்கு வங்கம்,
ஜாமியா மிலியா இஸ்லாமியா – டெல்லி,
காஷ்மீர் பல்கலை – காஷ்மீர்,
காகத்தியா பல்கலை – வாரங்கல்,
அலிகார் முஸ்லிம் பல்கலை – அலிகார்,
கிரைஸ்ட் பல்கலை – பெங்களூர்,
டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் – ஆக்ரா,
குருநானக் தேவ் பல்கலை – அமிர்தசரஸ்,
ஒஸ்மானியா பல்கலை – ஐதராபாத்,
ரபீந்திரபாரதி பல்கலை – கொல்கத்தா,
உத்கல் பல்கலை – புவனேஷ்வர்,
ராஜஸ்தான் பல்கலை – ஜெய்ப்பூர்.