கடந்த 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி வடக்கு அட்லாண்டிக் கடலில் தனது முதல் பயணத்தை ஆரம்பித்த டைட்டானிக் என்ற பிரமாண்டமான கப்பல் ஐஸ்பாறை ஒன்றின் மீது மோதியதால் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் சுமார் 1500 பயணிகள் வரை உயிரிழந்தனர். ஏராளமான விலை மதிப்பிற்குரிய பொருட்களும் சேதமடைந்தன.
இந்நிலையில் இந்த விபத்து நடந்தபின்னர் பல வருடங்களாக டைட்டானிக் கப்பலில் இருந்த பொருட்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுவந்தனர். மிட்புப்படையினர் கைப்பற்றிய ஏராளமான பொருட்களில் ஒன்றுதான் மேலே உள்ள படத்தில் நீங்கள் காணூம் மரத்தினால் ஆன நாற்காலி. மிகவும் கலையம்சத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த நாற்காலி சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.
இந்த நாற்காலியை பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் $150,000 மதிப்பிற்கு ஏலம் எடுத்ததாக ஏல நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.94 லட்சத்திற்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.