பச்சைபயறு – 1 கப்
பச்சரிசி – 2 தேக்கரண்டி
இஞ்சி – சிறு துண்டு
பச்சைமிளகாய் -3
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கிக்கொள்ளவும்)
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
செய்முறை :
• பச்சைபயறு மற்றும் பச்சரிசியை நான்கு மணிநேரம் ஊறவையுங்கள். அத்தோடு இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளுங்கள்.
• தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை ஊற்றி தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
• பச்சை நிறத்தில் சுவையாக இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள இஞ்சி துவையல் ஏற்றது. புரதம் நிறைந்த இந்த உணவை குழந்தைகளும், சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.