விஜய் நடித்து வரும் புலி படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடந்து வரும் தலக்கோணம் பகுதியில் பலத்த பாதுகாப்பை படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த படத்தின் எந்தவொரு ஸ்டில்களும் இண்டர்நெட்டில் லீக் ஆகிவிட கூடாது என்பதற்காகத்தான் இந்த பாதுகாப்பு ஏற்பாடு.
ஆனால் பாதுகாப்பையும் மீறி இந்த படத்தின் விஜய் ஸ்டில் ஒன்று இன்று காலை முதல் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் லீக் ஆகி வெகுவேகமாக பரவி வருகிறது.
இதனால் விஜய், சிம்புதேவன் உள்பட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஸ்டில் எப்படி லீக் ஆனது என்று படக்குழுவினர் அனைவரிடமும் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பத்து நிமிட வீடியோ காட்சிகளும் விரைவில் இண்டர்நெட்டில் லீக ஆகவுள்ளதாகவும் ஒரு வதந்தி பரவி வருவதால் படக்குழுவினர் விசாரணையை தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக படக்குழுவினர்களில் ஒருவர் கூறி வருகிறார்.