பூ பல்லக்கில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பவனி!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி, நேற்று முன்தினம் இரவு பூ பல்லக்கில் ராஜவீதிகளில் பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

010

காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர் கோவிலில், கடந்த மாதம் கிருத்திகை அன்று கொடியேற்றத்துடன், பங்குனி உத்திர திருகல்யாண உற்சவம் துவங்கியது. தொடர்ந்து, 13 நாள், பல்வேறு உற்சவங்கள் நடந்தன.மறு கிருத்திகை அன்று பூ பல்லக்கு உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

018

அதன்படி, நேற்று முன்தினம் இரவு, பல்லக்கில் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்து, அதில் ஏலவார் குழலி அம்பாளுடன் ஏகாம்பரநாதர் எழுந்தருளி பவனி வந்தார். காமாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுர வாசல் அருகில், மண்டகப்படி நடந்தது. பின், ராஜவீதி வழியாக சென்று இரவு, 11:00 மணியளவில் கோவிலை சென்றடைந்தனர். வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply