ஆம் ஆத்மி கூட்டத்தில் விவசாயி தற்கொலை. பெரும் பரபரப்பு

AAP+ManSuicide_Bடெல்லியில் நடைபெற்ற ஆம்ம் ஆத்மி பொதுக் கூட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத்சிங் இன்று காலை உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக  டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்சியை  தொடர்பு கொண்டு பேசிய அவர் நடந்த தற்கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்குமாறு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார். மத்திய அமைச்சரின் அறிவுறைக்கேற்ப  புதுடெல்லி சரக போலீஸ் இணை கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்த கமிஷனர் பஸ்சி உத்தரவிட்டார்.  அதே சமயத்தில், போலீசாரின் அலட்சியப் போக்கே விவசாயியின் உயிரிழப்புக்கு காரணம் என்று அரவிந்த் கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மி கட்சியினரும் குற்றம் கடுமையாகக் சாட்டியுள்ளனர்.

மேலும் விவசாயி கஜேந்திர சிங் உயிரிழந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட குறிப்பில் “கஜேந்திர சிங்கின் மறைவு மிகுந்த வேதனையும், ஏமாற்றமும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். அயராது உழைக்கும் எந்தவொரு விவசாயியும் தன்னை தனி நபராக இருப்பதாகக் கருதக் கூடாது. இந்திய விவசாயிகளின் எதிர்காலத்துக்காக நாம் அனைவரும் கூட்டாக உழைக்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply