கஜேந்திரன் என்னும் யானை, முதலையின் வாயில் சிக்கி உயிருக்குப் போராடியநிலையில், ஆதிமூலம் என திருமாலைச் சரணடைந்தது. அதன் துயரம் தீர்க்க, கருடனில் வந்தருளினார். திருமாலின்கட்டளையை நிறைவேற்ற கருடன், கை கூப்பியபடி வைகுண்டத்தில் அவர் எதிரில் காத்திருப்பவர். அதனால், கருடசேவை தரிசனத்தைச் சிறப்பாகச் சொல்கிறோம்.