ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதின. டெல்லி அணி முதல்முறையாக சொந்த மண்ணில் வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ததால் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. எஸ்.எஸ்.அய்யர், மற்றும் டுமினியின் அதிரடியால் 20 ஓவர்களில் டெல்லி அணி 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. எஸ்.எஸ்.அய்யர் 83 ரன்களும், டுமினி 78 ரன்களும் அடித்தனர்.
பின்னர் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. மும்பை அணியின் ரோஹித் சர்மா 30 ரன்களும், பட்டேல் 28 ரன்களும் ராயுடு 30 ரன்களும் எடுத்தனர்.
டெல்லி அணியின் எஸ்.எஸ்.அய்யர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.