நடுவானில் டைவ் அடித்த பயணிகள் விமானம். அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்.

flightஅமெரிக்காவில் நேற்று சிகாகோ நகரில் இருந்து ஹார்ட்போர்ட் நகருக்கு கிளம்பி சென்ற ஒரு விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோதுதிடீரென அழுத்தக்குறைபாடு ஏற்பட்டதால் டைவ் அடித்து மூன்று நிமிடங்களில் 38,000 அடி உயரத்தில் இருந்து 10,000 அடி உயரத்திற்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் இந்த இக்கட்டான நிலையை சமாளித்த விமானத்தின் பைலட் உடனடியாக விமானத்தை அருகில் இருந்த பப்பல்லோ என்ற விமானத்தை தரையிறக்கி பயணிகளின் உயிர்களை காப்பாற்றினார்.

75 பயணிகள் பயணம் செய்த இந்த விமானத்தில் ஒருசில பயணிகளுக்கு அழுத்தக்குறைவு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அருகில் பப்பல்லோ அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விமானத்தில் ஏற்பட்ட இந்த திடீர் அழுத்த வேறுபாடு குறித்து அறிக்கை வெளியிட்ட அந்நாட்டு மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம், விமானத்தில் அழுத்த குறைபாடு எதுவும் ஏற்படவில்லை என்றும் விமானம் 38000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அதில் உள்ள கதவு ஒன்று திறந்து கொண்டதாக கூறியுள்ளது. இதனால் விமானத்தில் அழுத்த குறைபாடு ஏற்பட்டதாக இச்சம்பவம் பற்றிய உண்மைகளை அறிந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Leave a Reply