உலகில் மிக மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடு. சுவிட்சர்லாந்து முதலிடம்

swissஉலகில் உள்ள 158 நாடுகளில் மிக அதிகமான அளவு மகிழ்ச்சியுடன் வாழும் மக்கள் உள்ள நாடு எது என்ற கருத்துக்கணிப்பு ஒன்றை தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வந்தது. இந்த கருத்து கணிப்பில் சுவிட்சர்லாந்து நாடு முதலிடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இந்தியா 117வது இடத்தில் உள்ளது. ஆனால் இந்தியாவை விட வன்முறை, தீவிரவாதம் ஆகிய அதிகம் உள்ள பாகிஸ்தான், ஈராக், ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் மிக மகிழ்ச்சியாக மக்கள் நாடுகளில் முதல் ஐந்து நாடுகள் பட்டியல் இதோ:
1. சுவிட்சர்லாந்து
2. ஐஸ்லாந்து
3. டென்மார்க்
4. நார்வே
5. கனடா

இதேபோல் இந்த பட்டியலில் கடைசி ஐந்து இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியல் இதோ:

1. டோகோ
2. புரூண்டி
3. சிரியா
4. பெனின்
5. ருவாண்டா

உலகில் உள்ள நாடுகளில் வாழும் மக்களிடம் உள்ள பணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு எடுக்கப்படவில்லை என்றும் அங்கு வாழும் மக்களின் நேர்மை, பெருந்தன்மை, நம்பிக்கை மற்றும் நல்ல சுகாதார வாழ்க்கை முறை ஆகியவற்றை அடிப்படையாகக்  கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply