ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மிக அபாரமாக டெல்லி அணியை தோற்கடித்தது. டெல்லி அணி தனது சொந்த மண்ணில் மிக மோசமான தோல்வியை நேற்று பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் டெல்லி அணியை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் எஸ்.எஸ்.அய்யரின் விக்கெட்டை இழந்தது. பின்னர் வந்த பேட்ஸ்மேன்களும் சொதப்பலான பேட்டிங்கை செய்ததால் அந்த அணி 18.2 ஓவர்களீல் வெறும் 95 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை விரட்டி சென்ற பெங்களூர் அணி விக்கெட் இழப்பின்றி 99 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிற்ஸ்ட் கெயில் 62 ரன்களூம், விராத் கோஹ்லி 35 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில் நேற்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு இரு அணிகளூக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.