வட மாநிலங்களில் மீண்டும் நிலநடுக்கம். பொதுமக்கள் பெரும் பதட்டம்.

earthquakeகடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக சுமார் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில் நேற்று மாலை இந்தியாவின் வட மாநிலங்களில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு அப்பகுதி மக்களை அச்சுறுத்தியதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்பட ஒரு சில பகுதிகளில் நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டு 60 பேர் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் நேற்று நிகழ்ந்த நிலநடுக்கம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்களில் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவான இந்த நிலஅதிர்வால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

இதேபோல், கிழக்கு டெல்லியிலும் நேற்று மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டது.. இதையடுத்து, அங்கு மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும், உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளிலும், ஒடிசாவின் புவனேஸ்வர், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply