ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் நடப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து நேற்று போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பிரபல நடிகை கராத்தே கல்யாணியும் சிக்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள ஐதராபாத் அருகேயுள்ள வனஸ்தலிபுரம் என்ற பகுதியில் சூதாட்டம் நடைபெற்ற பகுதியை சுற்றி வளைத்த போலீஸார், அங்கு பெருமளவு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டோர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். மொத்தம் 11 பேர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து ரூ.75 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கைதானவர்களில் ஒருவர் பிரபல தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இவர் தெலுங்கு திரையுலகில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர். சூதாட்டத்தில் தன்னை வேண்டுமென்றே சிலர் சிக்க வைத்தாக நடிகை கல்யாணி கூறியுள்ளார்.