கலைஞர் டிவியில் கடந்த பல வருடங்களாக புகழ்பெற்ற நடன நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வரும் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சிக்கு தற்போது கின்னஸ் சாதனை கிடைத்துள்ளது.
பிரபல சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா, பிருந்தா ஆகியோர் கொண்ட குழு மிகச்சிறப்பாக நடத்தி வரும் இந்த தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்து சீசன்கள், வித விதமான ஜோடிகள் என பிரமாண்டமாக நடைபெற்று வந்த மானாட மயிலாட ஏம்ஸ் ரூம் இல்யூஷன் என்ற முறையின் கீழ் தற்போது கின்னஸ் விருது படைத்துள்ளது. அதாவது ஒரே மேடையில் விதவிதமான செட்டுகள் அமைப்பது, ஒருவரே பல விதமான கெட்டப்களில் தோன்றி பார்வையாளர்களை கவர்வது என மானாட மயிலாட ஏம்ஸ் ரூம் இல்யூஷன் என்ற அடிப்படையில் கின்னஸ் ரெக்கார்டு அடுத்துள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு நீண்ட நேர ஏம்ஸ் ரூம் இல்யூஷனாக எபிசோட் ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. இதை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடத்திய போது கின்னஸ் பிரதிநிதிகள் பார்வையிட்டு கின்னஸ் ரெக்கார்டில் இணைந்துள்ளனர். அதற்கான சான்றிதழை கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் உள்ளிட்ட மானாட மயிலாட டீம் பெற்றுக்கொண்டுள்ளனர்.