ஏ.டி.எம்-இல் இதுவரை பணம் மட்டுமே எடுத்து வந்தோம். இனிமேல் ஏ.டி.எம்-இல் தங்கத்தையும் எடுத்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதி அபுதாபியில் நடைமுறைக்கு வந்துள்ளது. விரைவில் இந்த வசதி பல நாடுகளுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கவே நம்மூரில் ஒருசிலர் திணறி வரும் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தலைநகரான அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பேலஸ் என்ற ஹோட்டலில் உள்ள இயந்திரத்தின் மூலம் தங்கக்கட்டிகளை பெற்றுக் கொள்ளலாம். ஐக்கிய அரபு எமிரேட் கரன்ஸியான திர்ஹம் நோட்டுக்கள் அல்லது டெபிட், மற்றும் கிரடிட் கார்களை செலுத்தி நமது பணத்துக்கு ஏற்ற அன்றைய விலை மதிப்புள்ள தங்கக் கட்டிகளை பெற்றுக் கொள்ளலாம். 10 கிராம் முதல் பல கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் வரை வாங்கிக் கொள்ளும் வசதி இங்கு உண்டு.
தங்கக்கட்டிகள் வழங்கும் இயந்திரத்தின் மேற்பகுதி முழுவதுமே தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.