நேபாளத்தில் இன்சுலின் கிடைக்காமல் அவதியுறும் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்தியா உதவி.

nepalகடந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நேபாள நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக சுமார் 5000க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 8000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் அந்நாட்டிற்கு உலகெங்கிலும் இருந்து பணம் மற்றும் மருத்துவ உதவிகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா உள்பட உலக நாடுகள் பல இந்த உதவியை செய்து வரும் நிலையில் நேபாளத்தில் சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நீரழிவு நோயால் அவதியுற்று வருவதாகவும், அவர்களின் முக்கிய தேவையான இன்சுலின் பற்றாக்குறையால் அவர்கள் பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருவதாகவும் நேபாள தொலைக்காட்சியில் செய்தி வெளியாகியது.

இதையடுத்து நேபாளத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு ரூ.1 கோடி மதிப்புள்ள இன்சுலின் மருந்துகளை அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து  நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்  “நேபாளத்தில் 7 லட்சத்தும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகள் இருப்பதாகவும் அவர்களுக்காக ரூ.1 கோடி மதிப்புள்ள 75 ஆயிரம் இன்சுலின் மருந்து பாட்டில்கள் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார். 4 டன் எடை கொண்ட இந்த இன்சுலின் மருந்துகளுடன் கூடுதலாக உயிர் காக்கும் பிற மருந்துகளையும் அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறினார்.

Leave a Reply