குளத்தில் புதைக்கப்பட்ட தாயார் சிலை வெளியே தெரிவதால் பரபரப்பு!

LRG_20150429112111235343

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அஷ்டபுஜபெருமாள் கோவில் குளத்தில் புதைக்கப்பட்ட தாயார் சிலை, தண்ணீர் வற்றியதால் வெளியே தெரிகிறது.  இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாடல் பெற்ற வைணவ திருத்தலங்களில், காஞ்சிபுரம் புஷ்பவல்லி தாயார் உடனுறை அஷ்டபுஜ  பெருமாள் கோவிலும் ஒன்று. கோவிலுக்கு அருகே, கஜேந்திர தீர்த்த குளம் உள்ளது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன், தாயார் சன்னிதியில் மூலவராக  இருந்த புஷ்பவல்லி தாயார் கருங்கல் சிலை சிதிலம் அடைந்ததால், அதை அகற்றி கஜேந்திர திருக்குளத்தில் இட்டதாகவும்; அதற்கு பதிலாக, ÷ வறொரு தாயார் சிலை செய்யப்பட்டு, பிரதிஷ்டை செய்து, பூஜை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. திருக்குளத்தில் தண்ணீர் இருந்ததால்,  சிலை இதுவரை வெளியில் தெரியவில்லை. மழை பொய்த்தது, கோடை ஆகிய காரணங்களால் குளம் வறண்டு காணப்படுகிறது. இந்த குளத்தில்,  பகுதி சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். வெளியே தெரியும் சிலை, சிறுவர்களால் சிதிலம் அடையும் சூழல் உள்ளது. இதுகுறித்து, ÷ காவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், குளத்தில் இருக்கும் தாயார் சிலை சிதிலம் அடைந்திருந்ததாகவும்; அதனால், குளத்தில் புதைக்கப்பட்டதாகவும்  எனக்கு தகவல் கூறினர். தண்ணீர் இல்லாததால் தலை மட்டும் வெளியே தெரிகிறது. அதை எடுக்க வேண்டும் என்றால், இணை ஆணையரிடம்  அனுமதி பெற வேண்டும். அதன்பின், எங்கு வைப்பது என்று முடிவு செய்யப்படும் என்றார்.

Leave a Reply