ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிளை முந்தியது சாம்சங்

appleஸ்மார்ட் போன் சந்தையில் ஆப்பிள், சாம்சங் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இரு நிறுவனங்களும் மாறி மாறி முதலிடத்தை பெற்று வரும் நிலையில் சமீபத்தில் ஆப்பிளை நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி சாம்சங் முதல் இடத்தை பிடித்து சாதனை செய்துள்ளது.

 இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 82.4 மில்லியன் ஸ்மார்ட் போன்களை உலகம் முழுவதும் சாம்சங் நிறுவனம் விற்பனை செய்துள்ளதாகவும், இந்த விற்பனை உலகின் மொத்த ஸ்மார்ட் போன் விற்பனையில் 24.5 சதவீதமாகும் என்றும் புள்ளிவிபரம் ஒன்று கூறுகின்றது. இருப்பினும் இந்த விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது 7 சதவீதம் குறைவு என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை 2014-ம் ஆண்டின் இறுதி காலாண்டை ஒப்பிடும் போது இந்த காலாண்டில் குறைவாகவே ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளது என்றும் இந்த ஆண்டு காலாண்டில் 61.2 மில்லியன் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்ததில் அனைத்து நிறுவனங்களின் ஸ்மார்ட் போன் விற்பனையை கணக்கிடும்போது இந்த காலாண்டில் மட்டும் 337 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply