ஆஸ்கார் ரவிச்சந்திரன் சமீபத்தில் தயாரித்த ‘ஐ’ படத்திற்காக வாங்கிய கடனுக்காக அவருடைய சொத்துக்களை ஏலம் விடப்போவதாக சென்னை கதிட்ரல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இன்று பிரபல நாளிதழ் ஒன்றில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்த ஐ’ படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ.100 கோடியை தாண்டிவிட்டது.
ஆனால் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை. படமும் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதை ஊடகங்களின் விமர்சனம் தெரிவித்திருந்தது.
இந்த கடனுக்காக ஆஸ்கார் ரவிச்சந்திரன் வாங்கிய ரூ.97 கோடி ரூபாய் கடனை படத்தின் வசூலை வைத்து முழுவதும் திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இன்று ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஏற்கனவே ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்த பூகோளம்’ படமும் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஐ’ படத்தின் பட்ஜெட்டை தேவையில்லாமல் ஷங்கர் அதிகப்படுத்தி ஆஸ்கார் ரவிச்சந்திரைனை கடனாளிக்கி விட்டதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.
இரண்டு வருட காலம் படத்தயாரிப்பில் ஈடுபட்டது, கதைக்கு சம்பந்தமே இல்லாமல் படத்தின் லொகேஷனை சீனாவில் தேர்வு செய்தது, கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டுமே கோடிக்கணக்கில் செலவு செய்தது ஆகியவைகள் படத்தின் பட்ஜெட்டை மிக அதிகமாக்கிவிட்டதாக கூறப்படுகிறது.