ஐ.பி.எல் கிரிக்கெட்: டெல்லி மற்றும் மும்பை அணிகள் வெற்றி.

cricketவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் போட்டிகளில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்ற முதல்போட்டியில் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. நேற்றை போட்டியில் பஞ்சாப் மிக மோசமாக விளையாடியதால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு வெறும் 118 ரன்களே எடுத்தது. இந்த அணியின் 7 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ரன்கள் எடுத்தனர்.

119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. அகர்வால் 52 ரன்கள், எஸ்.எஸ்.அய்யர் 54 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் நடைபெற்ற 2வது போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 187 ரன்கள் குவித்தது. ராயுடு 53 ரன்களும், சிம்மன்ஸ் 38 ரன்களும் எடுத்தனர். பின்னர் விளையாடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 179 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணியின் சாம்சன் மிக அபாரமாக விளையாடி 76 ரன்கள் எடுத்தார்.

Leave a Reply