கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் காரணமாக சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் மக்களின் மனதில் இருந்து நீங்காத நிலையில் நேற்று அந்தமான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகள் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்தமான் தீவுகளில் இரண்டு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கங்கள் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 135 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இதேபோல, ஆஸ்திரேலியாவின் பபுவா நியூகினியா என்ற பகுதியில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது. கோகோபோவில் இருந்த 110 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் தகவல்கள் எதுவும் வரவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்ட அந்தமான், ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.