இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம். கோடை வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி?

hotகடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. பஞ்சாங்க முறைப்படி அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்று முதல் வருகின்ற 29 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு நீடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில்  கடந்த ஏப்ரல் மாதத்தில், மாநிலத்தின் ஒருசில இடங்களில் கோடை மழை பெய்து மக்களை குளிரிவித்ததுபோல் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவருகின்றது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின்போது வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த அக்னி நட்சத்திர காலத்தில் காய்ச்சி வடிகட்டிய குளிர்ந்த நீர், மோர், உப்பு போட்ட எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம் என்றும் வெள்ளரி, தர்பூசணி போன்ற பழவகைகளை சாப்பிட்டால் கோடையின் வெப்பத்தில் இருந்து ஓரளவு தப்பிக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அசைவைத்தை தவிர்ப்பது நல்லது குறிப்பாக மீன்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது என கூறப்படுகிறது.

கடும் வெயிலில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த உடன், வியர்வையுடன் இருக்கும்போது பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். வியர்வை காய்ந்த பின்னர் பானங்கள் அருந்துவது நல்லது. அதுவும் குளிர்பானங்களை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டியது அவசியம்.

நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். காரமான உணவு வகைகளை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. இதன் மூலம், அக்னி நட்சத்திர வெப்பத்திலிருந்து ஓரளவு நம்மை காத்துக்கொள்ள முடியும்.

Leave a Reply