நேபாள பூகம்பம். 7 நாட்களுக்கு பின்னர் உயிரோடு மீட்கப்பட்ட 101 வயது முதியவர்.

nepalநேபாள நாட்டில் கடந்த 80 வருடங்களாக இல்லாத அளவில் மிகப்பெரிய பூகம்பம் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி ஏற்பட்டு சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. கடந்த பத்து நாட்களாக சர்வதேச மீட்புப்படையினர்களுடன் இணைந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பூகம்பம் நிகழ்ந்து 7 நாட்களாக பூமிக்குள் புதைந்திருந்த 101 வயது முதியவர் ஒருவரை கடந்த சனிக்கிழமை மீட்புக்குழுவினர் சிறு காயங்களுடன் காப்பாற்றி உள்ளனர். இடிபாடுகளுக்கு இடையே அவர் எப்படி 7 நாட்களாக உயிரோடு இருந்தார் என்பதே ஆச்சரியமாக உள்ளதாக மீட்புப்படையினர் தலைவர் தெரிவித்தார்.

ஃபன்ச்சு தமங் என்ற 101 வயது நபரை உடனடியாக மீட்புப்படையினர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பின்னர் ஃபன்ச்சு தமங் நலமாக இருப்பதாகவும், ஆனால் மனதில் அதிர்ச்சி மட்டும் இன்னும் நீங்காமல் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அவருக்கு கவுன்சிலிங் அளிக்க போலீஸார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Leave a Reply