மசாலா டீ குடித்தால் தொண்டை வலி விலகும்..!

11210410

மசாலா டீ குடித்தால் தொண்டை வலி விலகும்தொண்டை வலி என்பது எல்லா வயதினருக்கும் எந்த நேரத்திலும் வரக்கூடியது. இவ்வாறு தொண்டை வலி ஏற்பட்டால் எச்சில் விழுங்கக்கூட முடியாது. சாப்பிடும்போதும் சிரமம் இருக்கும். எனவே இதை விரட்ட சில டிப்ஸ்…
சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுதான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொண்டையில் புண் இருக்கும்போது தொண்டை கரகரப்பு மற்றும் அரிப்பு இருக்க வாய்ப்புள்ளது.

இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாட்களில் குணமாகி விடும். சுகாதாரமற்ற தண்ணீரை குடிக்கும்போது வைரஸ் தொற்றும், சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளும்போது பாக்டீரியா தொற்றும் உண்டாகிறது. இதன் அடுத்தக்கட்டமாக தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். பாக்டீரியா தொற்றால் ஏற்படும் தொண்டைப்புண் எளிதில் அடுத்தவருக்கும் பரவுகிறது.

இதனால் எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். தொண்டையின் பின் சுவர் சிவந்து வெள்ளைப் புள்ளிகள் உருவாகும். மேலும் குளிர் காய்ச்சல் ஏற்படும். பெரும்பாலும் சளி, எச்சில் வழியாக இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மசாலா டீ குடித்தால் நல்லது. மசாலா டீ என்பது மிளகு, சீரகம், கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, பின் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்தால், தொண்டையில் இருக்கும் புண் சரியாகிவிடும்.

இஞ்சி:

தொண்டையில் உள்ள புண்ணிற்கு இஞ்சி மிகவும் சிறந்த ஒரு மருத்துவப்பொருளாகும். இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால், தொண்டையில் உள்ள கரகரப்பு சில நிமிடங்களில் சரியாகி விடுவதோடு, தொண்டை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
தயிர்: தயிர் உடலுக்கு அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் பொருள் அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடாமல், அறை வெப்பத்தில் வைத்து சாப்பிட்டால், தொண்டையில் ஏற்படும் வலி சரியாகிவிடும்.

எலுமிச்சை சாறு, தேன்:

சிட்ரஸ் பழங்களில் ஆன்டி வைரஸ் பொருள் அதிகமாக உள்ளது. எனவே அத்தகைய பழங்களில் ஒன்றான எலுமிச்சை சாற்றில், வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது தேன் சேர்த்து குடித்தால், தொண்டையில் வைரசால் ஏற்பட்டிருக்கும் புண் குணமாகிவிடும்.
மிளகு: காரப்பொருட்களில் ஒன்றான மிளகை உணவுடன் சேர்த்தோ அல்லது அதை தூளாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் தொண்டையில் உள்ள கரகரப்பு மற்றும் புண் விரைவில் சரியாகிவிடும். எனவே இருமல் அல்லது சளி இருக்கும்போது மிளகு சாப்பிடுவது எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுத்துவிடும்.

தடை:

நாவை ஊற வைக்கும் உணவுகளான புளி, ஊறுகாய் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் தொண்டையில் அரிப்போடு, வலியும் ஏற்படும். எனவே அத்தகைய உணவுகளை சாப்பிடக்கூடாது. மேலும் வினிகர் கலந்திருக்கும் உணவுகளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
பால்: தொண்டையில் புண் இருக்கும்போது ஒரு டம்ளர் சூடான பால் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் பாலை இந்த நேரத்தில் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
வறட்சியான உணவுகள்: வறட்சியான உணவுகளை தொண்டையில் புண் இருக்கும்போது சாப்பிடக்கூடாது. இதனால் அத்தகைய பொருட்களை விழுங்குவதற்கு கடினமாக இருப்பதோடு அதிகமான வலியும் ஏற்படும். தொண்டை வலி இருக்கும்போது பிஸ்கட், தானியங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டாம்.

தானியங்களை நீரில் ஊற வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் விழுங்குவதற்கு எளிதாக இருப்பதோடு, வலி ஏற்படாமலும் இருக்கும்.

பாதுகாப்பு முறை:

தொண்டையில் நோய் தொற்று இருக்கும்பட்சத்தில் இதமான சூட்டில் சுத்தமான திரவ உணவுகள் (தண்ணீர், சூப்) போன்றவைகளை குடிக்கலாம். இதன் மூலம் சளி மென்மையாகி எளிதில் வெளியேறும்.
மிதமான சூட்டில் தண்ணீர் எடுத்து அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும். இது தொண்டைக்கு இதமளிப்பதுடன் சளி வெளியேறவும் உதவும்.
சப்பி சாப்பிடும் மாத்திரை மற்றும் இனிப்பில்லாத சூயிங்கம் ஆகியவற்றை சுவைப்பதால் அதிக உமிழ்நீர் சுரந்து தொண்டையை சுத்தம் செய்யும். இந்த மாதிரியான நேரங்களில் பேச்சைக் குறைப்பதும் அவசியம். அசுத்தக் காற்றை சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும். புகை பிடித்தலை கண்டிப்பாக விட்டுவிட வேண்டும்.
காய்ச்சல், ஜலதோஷம் இருக்கும் பட்சத்தில் அடிக்கடி கைகளை கழுவிக் கொள்வது முக்கியம். கைகளால் முகத்தைத் துடைப்பதை தவிர்க்கலாம்.

Leave a Reply