என்னென்ன தேவை?
லெக் பீஸ் – 12 பீஸ்
எலுமிச்சை – 2
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
சோள மாவு – 2 மேஜைக் கரண்டி
அரிசி மாவு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கோழி கால் துண்டுகளை (லெக் பீஸ்) சுத்தமாக கழுவி கத்தியால் ஆழமாக இரண்டு மூன்று கீரல்கள் போட்டு, ஒரு எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து அதில் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் எலுமிச்சை சாற்றில் ஊறிய கோழி கால் துண்டுகளை எடுத்து நீரில் கழுவி தண்ணீரை வடிக்கவும். இதனுடன் சோளமாவு, உப்பு, மீதமுள்ள மற்றொரு எலுமிச்சை சாறு, சேர்த்து நன்கு பிசறவும்.
பிறகு மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், எண்ணெய் சேர்த்து நன்கு பிசறி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலாவில் ஊறிய கோழிக்கறி துண்டுகளை நன்கு வறுத்து எடுக்கவும். நல்ல எலுமிச்சையின் மனத்தில் குழந்தைகளுக்கு பிடித்த கோழிக்கறி லாலி பாப் தயார்.