சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படத்தை அடுத்து அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்து கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது., ஷங்கரின் இயக்கத்தில் ‘எந்திரன் 2’ படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இதே படத்தில் ரஜினிக்கு வில்லனாக விக்ரம் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை இயக்குபவர் அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய ரஞ்சித் என செய்திகள் தற்போது கசிந்து வருகின்றது. ரஞ்சித் கூறிய ஆக்சன் அதிரடி கதை ஒன்று ரஜினியை வெகுவாக கவர்ந்ததாகவும், உடனடியாக படத்தின் ஆரம்பகட்ட பணிகளை ரஜினி ஆரம்பிக்க சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளதாகவும், ரஜினிக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
லிங்கா தந்த தோல்வியால் ரஜினிகாந்த், சீனியர் இயக்குனர்களை தவிர்த்துவிட்டு, இளம் இயக்குனருடன் கைகோர்த்துள்ளார் என்றும், இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருப்பதாகவும் ரஜினியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரஜினியின் அடுத்த படத்தை ரஞ்சித் இயக்குவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதால் ஷங்கர் தந்து எந்திரன் 2′ படத்தை டிராப் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.