கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண். உ.பியில் பெரும் பரபரப்பு

marriageரூபாய் நோட்டுக்களை கூட எண்ணத் தெரியாத மணமகன் தனக்கு தேவையில்லை என்று கூறி திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு திருமணத்தை நிறுத்தியுள்ளார் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு புரட்சிப்பெண்.

 உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டம், மாரிடர் என்ற கிராமத்தில் மனோஜ் என்பவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. திருமண தினத்தன்று திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மணமகன் படிப்பறிவில்லாதவர் என்ற தகவல் அவருடைய நண்பர்கள் மூலம் தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண், உடனே மணமேடையிலேயே மணமகனை சோதிக்க முடிவு செய்தார். உடனடியாக தனது தந்தையிடம் இருந்து சில ரூபாய் நோட்டுக்களை வாங்கிய மணமகள் அதை மணமகன் மனோஜிடம் கொடுத்து அதை எண்ணுமாறு கூறினார்.

ஆனால் மணமகன் ரூபாய் நோட்டுகளை எண்ண திணறிக்கொண்டிருந்தார். இதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த மணமகள், உடனே ‘ரூபாய் நோட்டுக்களை கூட எண்ணத்தெரியாத படிப்பறிவில்லாத மணமகன் தனக்கு தேவையில்லை என்று கூறி திருமணத்தை நிறுத்தினார். இதனால் மணமேடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இரு குடும்பத்தாருக்கும் இடையே பெரும் சண்டை ஏற்பட்டது. பின்னர் உள்ளூர் தலைவர்கள் மற்றும் உறவினர்கள் தலையிட்டு இருதரப்பையும் சமாதானம் செய்த போதிலும் திருமணம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply