அல்கொய்தாவின் ஹிட் லிஸ்ட்டில் மோடி? பெரும் பரபரப்பு

Al-Qaedaபாரத பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து தாக்குதல் நடத்த அல்கொய்தா திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை முக்கிய இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் பேசியுள்ள அல்கொய்தா தலைவர் ஆசிம் உமர், “உலக வங்கி, பன்னாட்டு நிதியம் ஆகியவற்றின் கொள்கைகளின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக வளர்ந்த நாடுகள் தங்களது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

அதே போல் சார்லி ஹெப்டோ போன்ற ஊடகங்களின் எழுத்துகள், அவிஜித்ராய் போன்றவர்களின் கருத்துகள்,  இந்திய பிரதமர் மோடியின் பேச்சுகள் ஆகியவை முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளன. ஆள் இல்லா விமான தாக்குதல், மறைமுக போர் உள்ளிட்டவற்றின் மூலம் அந்த நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக, சார்லி ஹெப்டோ முதல் வங்க தேசம் வரை பதிலடி கொடுத்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு எதிரான கருத்தை அல்கொய்தா தெரிவித்துள்ளதால் அல்கொய்தாவின் ஹிட் லிஸ்ட்டில் பிரதமர் மோடியின் பெயர் இருக்கலாம் என உளவுத்துறை சந்தேகம் கொண்டுள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக அல்கொய்தா தீவிரவாதிகள் சதியில் ஈடுபட்டுள்ளனரா என்பதை உறுதி செய்ய, உளவுத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் மேலும் ஆசிம் உமரின் வீடியோ பேச்சுகள் குறித்தும் ரகசிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் வலைத்தளம், தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு தொலை தொடர்பு ஊடகங்களையும் உளவுத்துறையினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Leave a Reply