இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி. மீண்டும் மாரடைப்பா?

maniratnamசமீபத்தில் ‘ஓகே கண்மணி’ என்ற வெற்றிப்படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் மணிரத்னம் மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

மணிரத்னம் அவர்களின் உடல்நிலை குறித்து எவ்வித தகவல்களையும் வெளியிட வேண்டாம் என அவரது குடும்பத்தினர்கள் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், எனவே இப்போதைக்கு அவரது நிலைமை குறித்து எவ்வித தகவல்களையும் வெளியிட இயலாது என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மணிரத்னம் அவர்கள் மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான ‘ஓகே கண்மணி’ படத்தை அடுத்து அவர் தனுஷ் இயக்கத்தில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply