சமீபத்தில் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்து பதவியை இழந்த மஹிந்த ராஜபக்சே, நேற்று திடீரென இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்துள்ளதால் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் தேர்தல் செலவுக்காக 6,500 மில்லியன் ரூபாய் அரசு பணத்தை, ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே பயன்படுத்தியதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். தனது சகோதரரை காப்பாற்றுவதற்காக ராஜபக்சே, இலங்கை அதிபரை சந்தித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் ராஜபக்சேவின் மனைவி, மகன் உள்பட பலர் நிதி மோசடி வழக்கில் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ராஜபக்சே, அதிபரிடம் சமரசம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மீண்டும் இலங்கை அரசின் முக்கிய பதவி ஒன்றை கைப்பற்ற ராஜபக்சே, மைத்ரிபாலா சிறிசேனாவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.