ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள். வழக்கம்போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்.

resultஇன்று வெளியான ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளில் கணிதத்தில் 9,710 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 

இன்று வெளியான ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளின்படி இவ்வருடமும் வழக்கம்போல மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வருடம் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் மொத்தம் 90.6% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவற்றில் மாணவிகள்  93.4 சதவிகிதமும்,  மாணவர்கள் 87.5 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருப்பூர் மாணவி பவித்ரா மற்று கோவையை சேர்ந்த மாணவி நிவேதா ஆகியோர் மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்துள்ளனர். இவர்கள் வாங்கிய மொத்தம் மதிப்பெண்கள் 1,192 ஆகும்.

மேலும் 1991 மதிப்பெண்கள் பெற்று விக்னேஸ்வரன், பிரவீன், சரண்ராம், வித்யா வர்ஷினி ஆகிய 4 மாணவர்கள் இரண்டாவது இடத்தையும், நாமக்கல் மாவட்டம் டிரினிட்டி அகாடமி மாணவி பாரதி 1189 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும் இவ்வருடம் பாடவாரியாக 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு:

இயற்பியல்- 124, வேதியல்- 1,049, உயிரியல்-387, தாவரவியல்-75 விலங்கியல்-4, கணிதம்-9710, கணினி அறிவியல்-577, வணிகவியல்-819, கணக்குப்பதிவியல்-5,167, வணிகக் கணிதம்- 1,036 பேர் 200-க்கு 200 பெற்றுள்ளனர்.

Leave a Reply