மிக்ஸ்டு வெஜ் மஞ்சூரியன்

p101k

தேவையானவை: காய்கறி கலவை (பீன்ஸ், கேரட், கோஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, குடமிளகாய்) – அரை கிலோ, மைதா மாவு – அரை கப், அரிசி மாவு – 3 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒன்றரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, அஜினோமோட்டோ – ஒரு சிட்டிகை, மிளகுத்தூள் – முக்கால் டீஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், வெங்காயத்தாள் – அரை கட்டு, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: காய்கறிகளை சதுரமாக, பொடியாக நறுக்கவும். காய்கறி கலவையோடு மைதா மாவு, அரிசி மாவு, இஞ்சி – பூண்டு விழுது, சிறிதளவு மிளகாய்த்தூள், உப்பு, அஜினோமோட்டோ, ஒரு சொட்டு சோயா சாஸ் கலந்து லேசாக தண்ணீர் தெளித்துப் பிசிறி உருண்டைகளாக்கி, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து லேசாக வதங்கியதும், மிளகுத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து… பொரித்து வைத்த உருண்டைகள், மீதமுள்ள சோயா சாஸ் ஆகியவற்றையும் சேர்த்துக் கலந்து, சோள மாவை கரைத்து விட்டு, பளபளவென வந்து கெட்டியானதும், நறுக்கிய வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

இந்த வெஜ் மஞ்சூரியன்… ஃப்ரைடு ரைஸ், சப்பாத்திக்கு ஏற்ற ஜோடி. இதை தனியாகவும் சாப்பிடலாம்.

Leave a Reply