ராகுல் காந்தியின் நடைப்பயண திட்டத்தில் திடீர் மாற்றம்.

rahul gandhiசமீபத்தில் நீண்ட விடுமுறையில் வெளிநாடு சென்றுவிட்டு திரும்பி வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, நாடு திரும்பியவுடன் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். பாராளுமன்றத்தில் மோடி அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசிய ராகுல்காந்தி அடுத்தகட்டமாக தெலங்கானா மாநிலத்தில் விவசாயிகளுக்காக நடைப்பயணம் மேற்கொள்ள திட்டகிட்டார்.

தெலங்கானாவில் வரும் 11, 12 ஆகிய தேதிகளில் நடைப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்த ராகுல்காந்தி தற்போது திடீரென தனது பயண திட்ட்த்தை மாற்றியுள்ளார். மக்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாவது அமர்வு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், வரும் 13-ஆம் தேதி வரை அலுவல் நாள்களை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால், ராகுல்காந்தியும் தனது திட்டத்தின் தேதியை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி ராகுல்காந்தி வரும் 14ஆம் தேதி தெலங்கானா செல்வார் என்றும் அதற்கு மறுநாள் காலை விவசாயிகளுக்காக நடைப்பயணம் மேற்கொள்வார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply