இளங்கோவன், ரஜினிகாந்த், ஜி.கே.வாசன் ஆகியோர்களை ஒரே நாளில் சந்தித்த மு.க.ஸ்டாலின். புதிய கூட்டணியா?

stalinபாமக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அன்புமணியுடன் கடந்த சில நாட்களாக கடிதப்போர் நடத்தி வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களையும் ரஜினிகாந்த் உள்பட பிரபல நடிகர்களையும் நேரில் சந்தித்த சம்பவங்கள் தமிழகத்தின் அரசியல் வட்டாரங்களை பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட முக்கிய நபர்களை நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

மு.க.ஸ்டானின் சகோதரர் மு.க.தமிழரசுவின் மகனும், பிரபல நடிகருமான அருள்நிதியின் திருமணம் வரும் ஜூன் மாதம் 8ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. முக தலைவர் கருணாநிதி கையெழுத்திட்டு அச்சடிக்கப்பட்டுள்ள திருமண அழைப்பிதழை நேரில் சென்று கொடுக்கவே மு.க.ஸ்டாலின் மேற்கண்ட தலைவர்களை சந்தித்ததாகவும், இந்த சந்திப்பில் அரசியல் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Leave a Reply