அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு வழக்கின் தீர்ப்பு நாளை மறுநாள்வெளியாக உள்ள நிலையில், பெங்களூர் நகரில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி இன்று காலை உயரதிகாரிகளுடன் சக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தீர்ப்பு தேதி குறித்து ஐகோர்ட் அலுவலகத்தில் இருந்து அதிகாரபூர்வமாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், போலீஸ் கமிஷனர் ரெட்டி மற்றும் கூடுதல், இணை போலீஸ் கமிஷனர்கள், இதுகுறித்து நடத்திய ஆலோசனையில், தீர்ப்பு தேதியன்று பெங்களூரில் குவிய உள்ள அதிமுகவினரை கட்டுப்படுத்துவது குறித்தும், அவர்களை கண்காணிப்பது குறித்தும், ஆலோசிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு, சிறப்பு நீதிமன்றம் தண்டனை கொடுத்தபோது, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட பெங்களூரு கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரனை அவர்களையே இந்த முறையும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட நியமிக கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
இன்றும் நாளையும் தமிழகத்தில் இருந்து, பெங்களூருக்குள் வரும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதிமுக கரைவேட்டி கட்டியவர்களை ஒசூர் எல்லையிலேயே இறக்கிவிட பெங்களூர் போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.