விளம்பரமின்றி அடுத்தவர்களுக்கு உதவி செய்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் அஜீத் என்பது அனைவரும் அறிந்ததே. ஏழை எளிய மாணவர்களுக்கு கல்விக்கட்டணம், மருத்துவ சிகிச்சைக்கு நிதி ஆகிய உதவிகளை அவ்வப்போது செய்து கொண்டிருக்கும் அஜீத், சமீபத்தில் தன்னிடை பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கு சென்னையில் சொந்த வீடு கட்டி கொடுத்து அவர்களை மகிழ்வித்துள்ளார்.
அஜீத்திடம் இருந்து வீடுகளை பெற்ற அவரது தோட்டக்காரர், சமையல்காரர், டிரைவர் உள்ளிட்ட அனைவரும் அவருக்கு இன்னும் தொடர்ந்து தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அஜீத் தனது மேக்கப் கலைஞர்களுக்கு புதிதாக பல்சர் பைக் வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்தி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பைக்கை அஜீத்திடம் இருந்து பெற்ற ஒரு மேக்கப்மேன் ஃபேஸ்புக்கில் பல்சர் பைக்கின் படத்தை பதிவு செய்து இந்த தகவலையும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது மிக வேகமாக டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது.