ஐ.பி.எல் கிரிக்கெட்: கொல்கத்தா, ஐதராபாத் வெற்றி. முதலிடத்தை இழந்தது சென்னை.

cricket 100ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் வெற்றி பெற்றன. தற்போதைய புள்ளி பட்டியலின்படி கொல்கத்தா முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. இருப்பினும் கொல்கத்தா அணி 19.5 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

பஞ்சாப் அணி:        183/5  20 ஓவர்கள்

முரளிவிஜய்    28
வோரா        39
சாஹா        33
மாக்ஸ்வெல்    43
மில்லர்        27
குர்கீரட் சிங்    4
பெய்லி        0
உதிரிகள்        9

மொத்தம்        183

கொல்கத்தா அணி:        184/9  19.5 ஓவர்கள்

உத்தப்பா        17
காம்பீர்        24
பாண்டே        22
யாதவ்         9
யூசுப் பதான்    29
ரூஷல்        51
போத்தா        2
பியூஷ் செளலா    18
ஹோக்         5

உதிரிகள்        7

மொத்தம்        184

ஆட்டநாயகன்: ரூஷல் (கொல்கத்தா அணி)

பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் ஐதராபாத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

ஐதராபாத் அணி:         163/4   20 ஓவர்கள்

தவான்        13
வார்னர்        17
ஹெண்ட்ரிக்யூஸ்    74
மோர்கன்        22
ஷர்மா        16
போபாரா        17

உதிரிகள்        4

மொத்தம்        163

டெல்லி அணி:        157/4   20 ஓவர்கள்

கியூ டி கோக்    50
எஸ்.எஸ்.ஐயர்     0
டுமினி        12
யுவராஜ்சிங்     2
ஜாதவ்        63
திவாரி        26
உதிரிகள்         4

மொத்தம்        157

ஆட்டநாயகன்:ஹெண்ட்ரிக்யூஸ் (ஐதராபாத்)

Leave a Reply