சொத்துக்குவிப்பு வழக்கு. ஜெயலலிதா விடுதலை.

jayalalithaமுன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை இன்று சற்று முன்னர் நீதிபதி குமாரசாமி வெளியிட்டார். இந்த தீர்ப்பில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து  கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக, கடந்த 1996ஆம் ஆண்டில், சுப்ரமணியன் சுவாமி கொடுத்த புகாரின் பேரில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பினர் மேல்முறையீடு செய்த வழக்கில் சற்று முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்தவதாக்க உத்தரவிட்ட நீதிபதி குமாரசாமி, இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்ட நான்கு பேர்களையும் விடுதலை செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply