மதுரை: மதுரை வைகை ஆற்றில் மே 4ல் எழுந்தருளி பக்தர்கள் மனம் குளிவித்த கள்ளழகர், கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வளைதடி, நேரிகம்பு, வாள், சங்குசக்கரம் உள்ளிட்ட பஞ்சாயுதங்களுடன் தங்கப்பல்லக்கில் அழகர் மலைக்கு திரும்பினார். தன் இருப்பிடம் திரும்பிய அழகரை ஏராளமான பக்தர்கள் பூக்களை தூவி கோவிந்தா கோஷமிட்டு வணங்கி வரவேற்றனர். சுவாமிக்கு பூசணிக்காய்கள் வைத்து தீபமேற்றி திருஷ்டி கழித்தனர். தொடர்ந்து மேளதாளம் முழங்க, பக்தர்களின் கரகோஷங்களுடன் கள்ளழகர் இருப்பிடம் சேர்ந்தார்