18 ஆண்டுகளாக நீதித்துறையை கேலிக்குரியதாகியுள்ளது. ஜெயலலிதா தீர்ப்பு குறித்து குஷ்பு

jaya and kushbooசொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டு வந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி, கவர்னர் ரோசய்யா மற்றும் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு “18 ஆண்டுகள் நீதித்துறையை கேலிக்குரியதாக்கி இப்போது விடுதலையடைந்துள்ளீர்கள். ஆனால், உங்களால் குற்ற உணர்வின்றி உறங்க முடியுமா?’ என்று ஜெயலலிதாவுக்கு, கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை குஷ்பு தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது,””விடுவிப்பு என்ற ஒரு வார்த்தை உங்கள் குற்ற உணர்ச்சியை போக்கிவிடாது. 18 ஆண்டுகள் நீதித்துறையை கேலிக்குரியதாக்கி இப்போது விடுதலையடைந்துள்ளீர்கள். ஆனால், உங்களால் குற்ற உணர்வின்றி உறங்க முடியுமா?” என்று கேட்டுள்ளார்.
 
ஆனால் காங்கிரஸ் அகில இந்திய தலைவர்கள் முதல் தமிழக தலைவர்கள் வரை இந்த தீர்ப்பு குறித்து எவ்வித விமர்சனமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply