பிளாஸ்டி பொம்மை போல பிறந்த கொலோடியன் குழந்தை. பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு.

plastic babyபொதுவாக குழந்தை பிறக்கும்போது அதன் சருமம் மிகவும் மென்மையானதாக இருக்கும். ஆனால் ஆறு லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு அதன் சருமம் மிகவும் கடினமாக பிளாஸ்டிக் போன்று இருக்குமாம். இதற்கு மருத்துவத்துறையில் கொலோடியன் பேபி’ என்று கூறுவதுண்டு. நெகிழ்வுத்தன்மையற்ற இறுக்கமான சருமம், அசைவுகளின்போது அதிக வலி , இமைக்க முடியாத கண்கள், மெழுகு போன்ற தோற்றம் ஆகியவை இந்த குழந்தைகளின் அறிகுறி. இருப்பினும் இந்த குழந்தைகள் ஒரு மாத காலத்தில், இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். சில குழந்தைகளுக்கு மட்டும் வாழ்நாளுக்கும் இந்தப் பிரச்னை தொடரும்.

இந்நிலையில் இந்த தன்மைகளுடன் ஒரு குழந்தை பஞ்சாப் மாநிலம்   அமிர்தசரஸில் உள்ள குருநானக் தேவ் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் பிறந்துள்ளது. இந்த குழந்தையை கிச்சைக்காக கொண்டு பெற்றோர்கள் கூறியபோது, “‘‘பிளாஸ்டிக் மாதிரியே கனமா இருக்கு இவ தோல். கண்ணும், உதடும் சிவந்து போயிருக்கு. அவளால ‘AEeE0ல் குடிக்க முடியல. தொட்டாலே அழறா. அதான் இங்க தூக்கிட்டு வந்திருக்கோம்.’’ என்று பதற்றமாக கூறினர்.

இந்த குழந்தைக்கு தற்போது தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த குழந்தையை காண கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்கு பொதுமக்கள் வந்து, இந்த குழந்தை மிக விரைவில் குணமாக வேண்டும் என வேண்டிக்கொள்கின்றனர்.

Leave a Reply