சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று நடந்த அதிருத்ர மகா யாகம் மற்றும் சித்திரை மாத மகாஅபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று சிவகாம சுந்தரி அம்மன் சமேத நடராஜருக்கு சித்திரை மாதமகா அபிஷேகம் கனகசபையில் நடந்தது. அதனை யொட்டி கடந்த 6ம் தேதி முதல் தினம் தட்சிணா மூர்த்தி சன்னதி அருகில் கோவில் பொது தீட்சிதர்கள் அதிருத்ர ஜபம் மற்றும் வழிபாடு செய்தனர்.நேற்று காலை நடராஜருக்கு கும்பாபிஷேக மண்டலாபிஷேக சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து பொன்னம்பலம் சன்னதி அருகில்பொது தீட்சிதர்கள் அதிருத்ர ஹோமம் செய்தனர்.பின்னர் கனகசபையில் சிவகாம சுந்தரி அம்மன் சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது.இதில் பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களால் மகாஅபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த மகாஅபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்