சட்டப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகின்றது. இதனால் மாணவர்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.
இளங்கலை சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்த 8-ம் தேதி விநியோகிக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாகத்தில் ஏற்பட்ட தவிர்க்கமுடியாத காரணங்களால் சட்டப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தாற்காலிமாக தள்ளி வைக்கப்பட்டது.
இதனால், வெளியூரில் இருந்து சென்னை வந்த ஏராளமான மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஆனால் விண்ணப்பக் கட்டணத்துக்கான செல்லான் மட்டும் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 2 நாட்களில் சட்டப் படிப்புக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி அறிவிக்கப்படும்.